SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனுதாக்கல், வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

9/29/2016 10:30:45 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டும் இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி  தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  வேட்பு மனுதாக்கல் செப். 26ம்தேதி முதல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  

இதில் திருவரங்குளம், கறம்பக்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் பெறப்படும் இடங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.  மேலும், ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டி அரசினர் பல்தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் திருவரங்குளம், கறம்பக்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் இடம், விண்ணப்பம் வழங்கும் இடம், வாக்காளர் பட்டியல் விற்பனை செய்யுமிடம், வழங்கப்படும் விண்ணப்பங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் பார்வையிடப்பட்டது.

மேலும், விற்பனை செய்யப்படும் வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும், வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் பொழுது அவர்களை முன்மொழிபவர்களை தவிர பிற நபர்கள் வருவதை தவிர்க்கவும், வாக்கு எண்ணும் மையங்கள் விரைவாக அமைக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தவும், வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அளவு மின்விளக்குகள் ஒலிப்பெருக்கி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கணேஷ்  கூறினார். ஆய்வின்போது முக்கிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்