SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

9/22/2016 12:19:17 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை சாலை  ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் அவ்வப்போது நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள்  மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். உரிய பார்க்கிங் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம், கீழராஜவீதி, மேல ராஜவீதி, பிருந்தாவனம், ஆலங்குடி சாலை, சந்தபேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இந்தப்பகுதிகளில் வணிகம் நடக்கும் வியாபாரம் நடைபெறும் இடம் என்பதால் நகரின்  மற்ற பகுதிகளை விட எப்போதும் மக்கள் நடமாட்டம் சற்று அதிக அளவில் இருக்கும்.

இந்த பகுதிக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர்கள் முறையாக  பார்க்கிங் ஏரியாவிலோ நிறுத்துவதில். சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் ஒரே நேரத்தில் இரு புறத்திலும் பேருந்துகள் வரும் போது அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஒரே நேரத்தில் பேருந்துகள் வந்தால் சாலையில் போதிய வழியின்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் நகராட்சி மற்றம் போலீசார் இணைந்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் போக்குவரத்து போலீசார் அதனை கண்காணித்து  சரிசெய்ய வேண்டும். மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது அந்த பகுதியில் ரோந்து சென்று  போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். மருத்துவமனை, பழனியப்பா முக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள டிராபிக் சிக்னல்கள் அடிக்கடி மக்கர் செய்வதால் வாகன போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுகிறது.  அனைத்து சிக்னல்களையும் சரிசெய்ய வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை வேலைகளில் சிக்னல்களில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். இல்லை என்றால் சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையாது.  

முக்கிய வீதிகளில் பார்க்கிங் இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:  இதற்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் முக்கிய வீதிகளில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவர்கள் இலவசமாக ஏற்படுத்தி தரவேண்டாம். ஒரு வாகனத்திற்கு ரூ.5 அல்லது ரூ. 10 வாங்கி கொண்டு வாகனங்களை பாதுகாத்து கொடுத்தால் போதும். இவ்வாறு செய்தால் யாரும் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்ல மாட்டார்கள் இதனால் நகராட்சி நிர்வாகம் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து நகர்  பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்