SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

9/16/2016 10:19:07 AM

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் சுவாமியும், நந்திகேசுவரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது வேதாரண்யம் விளக்கழகு என்ற பெயருக்கேற்ப சுவாமி சன்னதியில் சரவிளக்கு ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது. பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர். பின்பு வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இதே போல் தோப்புத்துறை கைலாசநாதர் கோயில், தேத்தாகுடி தெற்கு அழகியநாதர் கோயில், கோடியக்காடு குழகர் கோயில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோயில், புஷ்பவனம் சுகந்தவனேஸ்வரர் கோயில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரர் முடையார் கோவில், அகரம் அழகியநாதர் சுவாமிகோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோயில், வடகட்டளை ருத்ரசோமநாதர் கோயில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன் கோயில், கத்திரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் சுவாமி கோயில், ஆறுகாட்டுத்துறை ஆறுகாட்டீஸ்வரர் கோயில் ஆகிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்