SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் ஆடிவார விழா

8/12/2016 10:30:23 AM

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் ஆடிவாரவிழா, பால்குடம் காவடி எடுத்தல் மற்றும் சந்தனகாப்பு விழா வரும் 14ம் தேதி நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சியில் காவல் தெய்வமாக பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும்  14ம் தேதி அன்று ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பொற்பனைக்கோட்டை முனீஸ்வரருக்கு புதுக்கோட்டை சாந்தனாத சுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் காவடி மேளதாளம் வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாகச் சென்று அபிசேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

முன்னதாக அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று 9 அடி உயர பொற்பனை முனீஸ்வரரை தரிசனம் செய்ய உள்ளனர். மதியம் பொற்பனை முனீஸ்வரருக்கு அபிசேக ஆராதனைகள், சந்தனகாப்பும்   நடைபெறவுள்ளது. மதியம் புதுக்கோட்டை பேட்டையார்கள் சார்பில் அன்னதானமும் இரவு கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.   புதுக்கோட்டையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மறுநாள் திங்கள்கிழமை கிடாவெட்டு பூஜை நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்