SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது

8/4/2016 2:05:09 PM

சென்னை, : மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார்.

எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமார் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

  • EcuadoranProtest2k19

    பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்