SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செம்மேடு அரசு பள்ளியில் மழையால் இடிந்த சுற்றுச்சுவர் மர்ம கும்பல் அட்டகாசம் : நிதி ஒதுக்கீடு தாமதம்

8/4/2016 11:10:32 AM

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் வல்வில்ஓரி ஜி.ஆர்.டி., அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

கொல்லிமலை, செம்மேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோர், இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பாதுகாப்பிற்காக பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன் கொல்லிமலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. பல ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கொல்லிமலை, செம்மேடு சுற்றுவட்டார பகுதி மக்களின் குழந்தைகள் அனைவரும் உயர்நிலை கல்வி கற்க, ஜி.ஆர்.டி., உயர்நிலை பள்ளி பிரதான பள்ளியாக உள்ளது. இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மழையில் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை புதிதாக கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் மர்ம கும்பல் குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். எனவே, பள்ளிக்கு விரைந்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொல்லிமலை செம்மேடு ஜி.ஆர்.டி., அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அரசிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும், விரைவில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்