SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 ஆண்டுகளுக்கு பின்னர் அதிசய நிகழ்வு :கோயில்களில் சிறப்பு வழிபாடு

8/2/2016 10:19:32 AM

தர்மபுரி: ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருபெயர்ச்சி ஒரே நாளில் வருகிறது; 100 ஆண்டுகளுக்கு பின்னர் ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு ஒரே நாளில் வருவதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது.

தொடர்ந்து பகல் 12 மணி வரை நவகிரக வழிபாடு நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை குருப்பெயர்ச்சி முதற்கால சிறப்பு வழிபாடு நடக்கிறது. குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசாமி கோயில், நெசவாளர் மகாலிங்கேஸ்வரர் கோயில், சக்திவினாயகர் கோயில் முருகன் கோயில், அப்பாவு நகர் விநாயகர் கோயில், தீயணைப்பு நிலையம் ஆரணீஸ்வரர் கோயில், காரிமங்கலம் அபிதகுஜலாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோயில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோயில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோயில்களில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோயில், எஸ்வி ரோடு அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்