SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரகனூர் முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகையாற்றில் சீமைக்கருவேல மரங்கள், புதர்களை அகற்றுங்கள்! விவசாயிகள் வலியுறுத்தல்

7/30/2016 10:39:42 AM

சிவகங்கை, : விரகனூர் மதகு அணை முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகையாற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றிச்சுத்தப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.மதுரை அருகேயுள்ள விரகனூர் மதகு அணையில் திறந்துவிடப்படும் வைகை நீர், மானாமதுரை முகப்பு வழியே கீழப்பசலை கால்வாய் வரை வரும். இதில் இடது பிரதானக் கால்வாய் மூலம் 48 கண்மாய்களுக்கும், வலது பிரதானக் கால்வாய் மூலம் 50 கண்மாய்களுக்கும் நீர் கிடைக்கும். ராமநாதபுர மாவட்ட பங்கு நீரில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து இடதுபுறக் கால்வாயில் நீர் திறக்கப்படும். இந்த நீரின் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையான்குடி தாலுகா பகுதிகளில் உள்ள கீழநெட்டூர், மேலநெட்டூர், முனைவென்றி, குறிச்சி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி தாலுகா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் வைகையாற்றின் மூலம் பயன்பெற்று வந்தன.

கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கு நீர் கிடைக்காதது, காலதாமதமாக வழங்கப்பட்ட நீரும் சரிவர இலக்குகளுக்கு சேராதது என வைகையாற்றுப் பாசனம் பாதிக்கப்பட்டது. மேலும் வைகையாற்று குடிநீர் திட்டங்கள், நிலத்தடி நீரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு, சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் மண்டி காணப்படுவதால் தண்ணீர் ஆறு மற்றும் அதற்கான கால்வாய் வழிச் செல்லாமல் அதன் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வைகையாற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்களை ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் அகற்றியதுபோல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மானாமதுரை எல்லையை ஒட்டியுள்ள வைகையாற்றுப் பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், விரகனூர் மதகு அணை முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதிக்குள் வரும் வைகையாற்றுப் பகுதி முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களையும், புதர்களையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், “ஆண்டுதோறும் வைகையாற்றில் மாவட்டத்திற்குரிய பங்குநீர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கிறது. கிடைக்கும் நீரும் உரிய இடங்களுக்குச் செல்லாமல் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்களால் வீணாகிறது. சிலைமான் முதல் பார்த்திபனூர் வரை உள்ள விரகனூர் மதகு அணை வலது, இடது புறக் கால்வாய்கள், பார்த்திபனூர் வலது, இடது புற கால்வாய்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், புதர்களை முழுமையாக அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்