SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூர்வாரப்படும் வண்டல் மண்ணை தொழு உரமாக பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்: விவசாய சங்கம் கோரிக்கை

7/25/2016 12:18:28 PM

திருச்சி : ஏரி, வாய்க்கால்களில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்கு தொழு உரமாக பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரதீய கிசான் சங்கத்தின் தமிழ்நாடு  மாநில செய்தி தொடர்பாளர் வீரசேகரன், தமிழக  முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் வரத்து, வடிவாய்க்கால்களை தூர்வாருவதற்கும், காவிரியை ஒட்டிய பிரதான 17 பாசன வாய்க்கால்கள் மற்றும் தமிழகத்திலுள்ள இதர நதிகளை தூர்வார (குடி மராமத்துக்காக) ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. விவசாயிகள் தங்கள் பாசனப் பகுதிகளுக்கு உட்பட்ட வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் போன்றவற்றை தங்களுடைய சொந்த முயற்சியில் பட்டாதாரர்கள் தூர்வாரி வந்தார்கள். இதுவே குடிமராமத்து என அழைக்கப்பட்டது. அதாவது பயன்பாட்டாளர்களே தங்களுடைய நீராதாரங்களை தூர்வாரிக் கொள்ளும் நிலை இருந்தது. அரசு குளங்களில் உள்ள வண்டல் மண்ணை, தாது மணல் என அறிவித்து அவைகளை விவசாயிகள் தூர்வார முற்படும் போது அரசின் கடுமையான சட்டங்களினால் குடிமராமத்துப் பணி என்பது தற்போது வழக்கில் இருந்து ஒழிந்து விட்டது. எனவே,  தூர்வாரப்படும் வண்டல் மண்ணை அந்தந்த பகுதி விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்கு தொழு உரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய வகையில் அரசின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க உரிய துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்