SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி

7/15/2016 10:32:54 AM

நாமக்கல், :  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைபேராசிரியர் அகிலா கூறியதாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாதம் 19ம் தேதி காலை 9 மணிக்கு ‘சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது.

இப்பயிற்சியில் மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவங்கள், மண் மற்றும் பாசன நீர் மாதிரி எடுக்கும் முறைகள், ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்து நிர்வாகம், உரமிடும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வரலாம். 18ம் தேதிக்குள் பெயரை கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்