SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது எப்படி? வேளாண்துறை ஆலோசனை

7/13/2016 10:55:36 AM

பழநி, : மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடும் முறை குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பழநி பகுதியில் உள்ள கிராமங்களில் மானாவாரி விவசாயிகள், தங்களது விவசாயப்பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் மானாவாரியில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:

மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட கோ-1, கோஎச் (எம்)-4, கோ எச்(எம்)-5 ஆகியவை ஏற்ற ரகங்கள். ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். இடைவெளி 45*20 சென்டிமீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். கருவேல மர இலைச்சாறு மற்றும் புங்கம் இலைச்சாறை 1:1 என்ற அளவில் கலந்து 1:0:6 என்ற விகிதத்தில் விதை மற்றும் கலவையினை கலந்து 16 மணி நேரம் ஊர வைத்து நிழலில் உலர்த்தி பின்பு புங்கம் இலைத்தூளை 1 கிலோ விதைக்கு 300 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும்.

ரசாயன உரங்களாக இருந்தால் அடி உரத்திற்கு 30 கிலோ தழைச்சத்து அல்லது யூரியா 65 கிலோ, மணிச்சத்து 30 கிலோ அல்லது சூப்பர் பாஸ்பேட் 188 கிலோ மற்றும் சாம்பல் சத்து 30 கிலோ அல்லது மூரியேட் ஆஃப் பொட்டாஷ் 50 கிலோ என்ற அளவில் இருக்க வேண்டும். சிறுதானியம் ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ என்ற அளவில் தொழுஉரம் 50 கிலோவுடன் கலந்து பார்களின் ஓரங்களில் இட வேண்டும்.

900 லிட்டர் தண்ணீரில் அட்ரசின் 500 கிராம் கலந்து, விதைத்த 3வது நாளில் தெளிக்க வேண்டும். பயறு வகை பயிர்கள் ஊடுபயிராகச் செய்திருந்தால் ஒரு ஹெக்டேருக்கு அலக்குளோர் 4 லிட்டர் கலந்து தெளித்து, களை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்களையோ, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்