SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடிவேரி அணை கட்டிய கொங்காள்வான் மன்னருக்கு சிலை வைக்க வலியுறுத்தல்

7/4/2016 10:30:47 AM

ஈரோடு, : கொடிவேரி அணையை கட்டி விவசாயிகளை வாழ வைத்த கொங்காள்வான் மன்னருக்கு சிலை வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு வேட்டுவகவுண்டர்கள் இளைஞர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கொல்லிமலையில் ஆடி 18ல் வல்வில் ஓரி விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக கொங்குநாடு வேட்டுவகவுண்டர்கள் இளைஞர் நலச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பூலுவராஜன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை கட்டுமான பணி நடைபெறவில்லை. இந்த பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வல்வில் ஓரி பெயரை சூட்ட வேண்டும்.

கோபி அருகே கொடிவேரி அணையை கட்டி நீர்ப்பாசனத்தை பெருக்கி விவசாயிகளை வாழ வைத்த கொங்காள்வான் மன்னருக்கு சிலை வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேட்டுவகவுண்டர்களின் உள்பிரிவான வேட்டைக்காரர்கள், மலைவேடர்கள், வேடர், வேட்டுவர், புன்னம் வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேட்டைக்கார கவுண்டர், பூலுவ வேட்டுவோர் ஆகியோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொங்கு வேட்டுவ கவுண்டர்களின் உள்பிரிவாக கொண்டு வர வேண்டும்,

அண்ணமார் சாமி கதையில் பிற சாதியினரின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மகிகவுண்டர், மாவட்ட செயலாளர்கள் ஈரோடு கிழக்கு ஜெகதீசன், நாமக்கல் மேற்கு சண்முகசுந்தரம் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்