SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை

7/1/2016 11:44:37 AM

திருச்செந்தூர்,  :  திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர்  பர்ஜானா பேகம்(31). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம்  சாந்திநகரைச் சேர்ந்த சத்தியகுமார்(31) என்பவரது  வீட்டின் முன்பு அமர்ந்து திடீர்  தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பர்ஜானாபேகம் கூறுகையில்,  ‘‘நானும் சத்தியகுமாரும் கடந்த 2009ம் ஆண்டு திருச்சியில் காதல் திருமணம்  செய்து கொண்டோம்.  முஸ்லிம் மதத்திற்கு மாறி அவர் என்னை திருமணம் செய்தார்.  எனது குடும்பத்தார் முன்னிலையில் எங்களது திருமணம் நடந்தது.   

திருமணத்திற்கு சத்தியகுமாரின் குடும்பத்தினர் வரவில்லை. தொடர்ந்து  நாங்கள் தூத்துக்குடி அருகில் உள்ள வாகைக்குளத்தில் தனியாக  வாடகை வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர், தான் வெளிநாடு  செல்ல விரும்புவதாகவும், இதனால் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம் என்றும் கூறினார். வெளிநாட்டிலிருந்து அவர் வரும் வரை  சென்னையில் சட்டக்கல்லுரியில் படிக்குமாறு கூறி 27.8.2011ல் என்னை  திருச்சிக்கு அனுப்பினார்.
இந்த சமயத்தில் எனது கணவர் வீட்டார் அவரின்  மனதை மாற்றி வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து  தகவல் தெரிந்து நான் வந்தபோது என்னை சமாதானம் செய்து என்னுடன் இருப்பதாக  கூறி என்னை மீண்டும் ஏமாற்றி விட்டார்.

இதனால் நான் புதுக்கோட்டை  போலீசாரிடம் புகார் கொடுத்து அதன்படி வழக்கு நடந்து வருகிறது. மேலும்  கணவருடன் சேர்ந்து வாழ உரிமை கோரி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நான் வழக்கு  தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள எனது கணவரின் வீட்டில் நான் வசிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி தான் இங்கு வந்தபோது எனது கணவர் வீட்டார் என்னை அனுமதிக்க மறுத்து கதவை பூட்டி விட்டனர். எனவே என்னை வீட்டில்  சேர்க்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரபோவில்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்