SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேஸ்புக்கில் மகளின் ஆபாச பதிவு தட்டிக்கேட்ட தந்தைக்கு கொலை மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது

6/28/2016 10:03:05 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி குறித்து ஆபாச தகவலை பதிவு செய்ததை அவரது தந்தை தட்டிக்கேட்டதால் சரமாரி தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுவை மாநிலம் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (53). இவரது மூத்த மகள் லின்சி (20). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்தூரில் உறவினர் கலைச்செல்வன் என்பவரது வீட்டில் தங்கி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்தவரும், சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான சோமநாதன் மகன் மதியழகன் (24) என்பவருக்கும் ராங் கால் நம்பர் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, லின்சி மதியழகனுடன் பேசுவதை தவிர்த்து விட்டாராம்.இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், லின்சி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக தகவலை பதிவு செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த லின்சியின் தந்தை வின்சென்ட் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த மதியழகனிடம் ஏன் எனது மகள் குறித்து ஆபாசமான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்தாய் என தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மதியழகன், வின்சென்ட்டை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வின்சென்ட் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மதியழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்