SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

6/24/2016 10:34:42 AM

தஞ்சை, : தஞ்சை கீழவாசல் பூமால்ராவுத்தர் கோயில் தெருவில் உள்ள அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோயில்களில் வடபத்திர காளியம்மன் கோயிலும் ஒன்று. இந்த கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 20ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. அன்றைய தினம் மாலை தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

21ம் தேதி காலை முதல்கால யாகபூஜை நடந்தது. 22ம் தேதி இரண்டாம் காலபூஜை, மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ரமணி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே, மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி, கோயில் செயல் அலுவலர் மாதவன் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்