SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுகை அருகே செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன்கோயிலில் நிலைக்கால் நடும் விழாஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

6/4/2016 11:45:54 AM

புதுக்கோட்டை, : புதுகை கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருப்பணியை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கு நிலைக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கறம்பக்காடு கிராமத்தில் கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. கோயில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோயில் முன்பு பிரமாண்ட ராஜகோபுரம் அமைக்க கிராமத்தார்கள் முடிவெடுத்து அதற்கான பணிகளும் தொடங்கி மேற்கொண்டு வந்தனர். ராஜகோபுரத்திற்கான நிலைக்கால் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலைக்கால் நடும் விழா திருப்பணிக்குழுவினர் தலைமையில் கிராமத்தார்கள் முன்னிலையில் நேற்று காலை நடந்தது.

இந்த விழாவை முன்னிட்டு முன்னதாக நிலைக்கால்கள் மற்றும் கருங்கல் படிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு நிலைக்கால் தூக்கி நிறுத்தப்பட்டது. விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிலைக்கால் நடும்விழாவை முன்னிட்டு காலை 11 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடந்து மாலை சித்துப் பொங்கல் விழாவும் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, மற்றும் கோயில் நிர்வாகிகள், செரியலூர் கறம்பக்காடு கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்