SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கத்தை விட 10 மடங்கு அதிக மதிப்புடைய கஸ்தூரி மான் சுரப்பி ஆன்லைனில் விற்ற 2 பேர் கைது பொறி வைத்து பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினர் அதிரடி

6/2/2016 10:17:53 AM


திருப்பத்தூர், : தங்கத்தைவிட 10 மடங்கு அதிக மதிப்புடைய அரிய வகை கஸ்தூரி மான் சுரப்பியை ஆன்லைனில் விற்ற 2 பேரை திருப்பத்தூர் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.தமிழக காட்டுப்பகுதிகளில் மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவற்றை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். மான்கள் பல வகை உண்டு. அதில் புள்ளி மான், ஆண் மான், பெண் மான் என்பவை ஆகும். இதில், கஸ்தூரி மான் என்ற அரியவகை மான்கள் குளிர் பிரதேசமான இமயமலை, சிக்கிம், பூடான், ஜம்மு காஷ்மீர் போன்ற 4 மாநிலங்களில் தான் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இவ்வகையான மான்கள் பெரும்பாலும் தமிழக காட்டுப்பகுதிகளில் வாழமுடியாது. தற்போது இந்த மான் இனங்கள் சமூக விரோதிகளால் வேகமாக அழிந்துகொண்டு வருகின்றன. இந்த மான்களை பிடித்து கொன்று அதன் வயிற்று பகுதியில் உள்ள உருண்டை வடிவிலான சுரப்பியை எடுத்து ஆன்லைன் மூலம் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த பிரவீன் என்பவர் தனது முகநூலில் ஆன்லைனில் கஸ்தூரி மானின் சுரப்பியை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். இதைப்பார்த்த திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தனது முகநூலில் தனக்கு கஸ்தூரி மானின் சுரப்பி வேண்டும் என்று மெசேஜ் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

அதன்பேரில், 10 நாட்கள் கழித்து நேற்று பெங்களுர் ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(35), வேலூர் மாவட்டம், சோளிங்கர் புதூர்மேடு பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரும் திருப்பத்தூர் வந்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கலாநிதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கஸ்தூரி மானின் பொருட்களை கொண்டு வந்ததாகவும், அதன் மதிப்பு ரூ20 லட்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் வனவர்கள் பரமசிவம், சங்கர் மற்றும் வனத்துறையினர் மாறு வேடத்தில் சென்று திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் அருகில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் இருந்த கஸ்தூரி மானின் 400 கிராம் எடையுள்ள சுரப்பியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறுகையில், `கஸ்தூரி மானின் வயிற்றில் இருந்து கிடைக்கும் சுரப்பியின் மதிப்பு தங்கத்தை விட 10 மடங்கு அதிகமானதாகும். இந்த சுரப்பி நரம்பு மண்டல மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. மேலும், இது நல்ல நறுமணம் வீசும் வகையில் உள்ள மருத்துவ பொருளாகும்.

இந்த சுரப்பியை வீடு, கடைகளில் வைத்தால் பணம், பொருள் வந்து குவியும் என்று பெரிய மாபிய கும்பல் ஒன்று ஆன்லைனில் இதன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. எனவே, விரைவில் பெங்களுர் வனத்துறையுடன் இணைந்து மாபியா கும்பலை பிடித்து விடுவோம்' என்றார்.



திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்