SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தர்வகோட்டை கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

5/26/2016 11:30:31 AM

புதுக்கோட்டை :  10ம்வகுப்பு பொதுத்தேர்வில் கந்தர்வகோட்டை கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள 10 அரசுப்பள்ளிகளில் தேர்வெழுதிய 892 மாணவ மாணவிகளில் 813 பேர் தேர்ச்சி  பெற்று  91% பெற்றுள்ளனர் இது கடந்த ஆண்டுகளை விட அதிக தேர்ச்சி விழுக்காடாக உள்ளது. மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அதிக தேர்ச்சி விழுக்காட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் , மக்கள் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 35 மாணவ மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் ,முதல் மூன்று இடங்களை சக்திவேல் - 449  சதீஷ்குமார் - 447, மதிக்குமார் 442 மதிப்பெண்களுடன் 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 170 மாணவர்களில் 151 தேர்ச்சி பெற்றுள்ளனர், முதல் மூன்று இடங்களை தினேஷ் - 461,  கண்ணன் - 441, முருகானந்தம் 440 மதிப்பெண்களுடன் 89 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 233 மாணவிகளில் 215 தேர்ச்சி பெற்றுள்ளனர், கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 162 மாணவர்களில் 139 தேர்ச்சி பெற்றுள்ளனர், முதல் மூன்று இடங்களை  ஹரிபிரசாத் - 478, சப்ரீன் சஹானா - 472, அபிநயா- 471, மதிப்பெண்களுடன்,92% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதே போன்று வேலாடிப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 114 மாணவ மாணவிகளில் 108 தேர்ச்சி பெற்றுள்ளதோடு 95 %  தேர்ச்சியும், வெள்ளாளவிடுதி உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 61 மாணவ மாணவிகளில் 55 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதோடு 88 %  தேர்ச்சியும், குளத்தூர் நாயக்கர்பட்டி உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 33 மாணவ மாணவிகளில் 32 பேர் தேர்ச்சி பெற்று ள்ளதோடு 97% தேர்ச்சியையும் பல்லவராயன்பட்டி உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 21 மாணவ மாணவிகளில்  20 பேர் தேர்ச்சி பெற்று 95%  தேர்ச்சியையும், துவார் உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 34 மாணவ மாணவிகளில் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதோடு 95%  தேர்ச்சியையும், புதுநகர் உயர்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 39 மாணவ மாணவிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்று 87 % தேர்ச்சியையும்  பெற்றுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்