SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொரவளூர் கிராமத்தில் தட்டு நாற்றங்கால் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி

5/25/2016 11:44:43 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில், குறுவை நெல் சாகுபடிக்கு இயந்திரம் மூலம் நெல் நடவு செய்ய தட்டு நாற்றங்கால் அமைக்க செயல் விளக்கம் நடந்தது. விருத்தாசலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயராகவன் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ராஜலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் ராஜிவ்காந்தி மற்றும் வேளாண்மை துறையினர், குறுவை நெல் சாகுபடிக்கு தட்டு நாற்றங்கால் அமைக்க  விவசாயிகளுக்கு செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில், வேளாண்மை உதவி இயக்குனர் விஜயராகவன் பேசும்போது, விவசாயிகள்  குறுவை சாகுபடிக்கு கோ.51 என்ற நெல் ரகத்தை தேர்ந்தெடுத்து தட்டுகளில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். 13 நாட்கள் முடிந்ததும் இளம் நாற்றுகளை இயந்திரத்தின் உதவியுடன் நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு இயந்திர நடவு செய்வதால் விதை அளவு குறையும். குறிப்பாக 150 கிலோ விதைக்கு 13 ஏக்கர் வரை நடவு செய்யலாம். ஆழமாக நடவு செய்யாமல் மேல் நடவு செய்வதால் தூர்கள் அதிகம் வெடிக்கும். இடைவெளி ஒரே சீராக இருப்பதால் காற்றோட்டம் நன்கு கிடைத்து பயிர்கள் செழிப்புடன் வளரும். மேலும் சத்து பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் பயிர்களின் இடைவெளி பகுதிகளுக்கு சென்று உரங்களை தூவ முடியும். இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும், என்றார்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்