SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டு வாசலில் விளையாடிய குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண் சிக்கினார் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா போலீசார் தீவிர விசாரணை

5/21/2016 11:54:39 AM

தண்டையார்பேட்டை, : கொண்டித்தோப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஆட்டோவில் கடத்திய பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கொண்டித்தோப்பு, பெத்து தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (30), தனியார்  நிறுவன ஊழியர். இவரது மகன் விஷ்ணு (3). நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் விஷ்ணு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒரு பெண், கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை விஷ்ணுவை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறினார்.

இதனால், குழந்தை அலறி கூச்சலிட்டது. சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்து பார்த்த பத்மநாபன் மற்றும் அக்கம் பக்கத்தினர், ஆட்டோவை விரட்டினர். இதை பார்த்து பயந்து போன ஆட்டோ டிரைவர், பாதி வழியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடினார். விரட்டி வந்த பொதுமக்கள், குழந்தை விஷ்ணுவை ஆட்டோவில் விட்டுவிட்டு தப்பியோட முயன்ற பெண்ணை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். ஆட்டோவில் இருந்து குழந்தையை மீட்டனர். பின்னர், இதுபற்றி ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், மணலியை சேர்ந்த  ராஜேஸ்வரி (30) என்பது தெரிவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே யானைக்கவுனி பகுதியிலும், பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் எதிரில் பிளாட்பாரத்தில் இருந்த குழந்தையும் கடந்த 6 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன குழந்தைகள் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது, குழந்தையை இந்த பெண் எதற்கு கடத்தினார்,  ஏற்கனவே 2 குழந்தைகளையும் இந்த பெண்தான் கடத்தினாரா, கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார், உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் மவுனம்

சென்னையில் கடந்த 6 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இதில், யானைக்கவுனி பகுதி மற்றும் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே நடைபாதையில் தூங்கிய 2 குழந்தைகளும் அடங்கும். இதுதொடர்பாக, பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்து இருந்தனர்.

ஆனால், இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்படவில்லை. இதுதொடர்பாக, யாரையும் போலீசார் கைது செய்யவும் இல்லை. தற்போது கூட ஆட்டோவில் குழந்தையை கடத்திய பெண்ணை பொதுமக்கள்தான் மடக்கி பிடித்துள்ளனர். எனவே, பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்