SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பத்தூர் கோயில் தேரோட்டம்

3/23/2016 10:15:51 AM

லாலாப்பேட்டை :  லாலாப்பேட்டை அருகேயுள்ள கருப்பத்தூர் சுகுந்த குந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தனர். லாலாப்பேட்டை அருகேயுள்ள கருப்பத்தூர்  சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேர் திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 மற்றும் 16ம் தேதி கேடயம் நிகழ்ச்சி,  17ம் தேதி சேஷவாகன வீதியுலா, 18ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.  19 மற்றும் 20ம் தேதிகளில் முத்துப்பல்லக்கு ஊர்வலம், 21ம்தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சுகுந்தகுந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் தேரை பக்தர்கள் வடம்  பிடித்து இழுத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்