SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.29 லட்சத்தில் மின்விளக்கு வசதி

3/4/2016 9:57:38 AM

தாமபுரி : தர்மபுரி மாவட்டத்தின் எல்லையாக தொப்பூர் கணவாய் உள்ளது. தொப்பூர் கணவாயின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண்.7 செல்கிறது. இந்த கணவாயின் வழியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இருபுறமும் மலைகளால் சூழ்ந்த தொப்பூர் கணவாயில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விபத்து நடக்கிறது. எனவே, மின்விளக்கு வசதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தர்மபுரி தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தொப்பூர் கணவாய் பகுதியில் சென்டர் மீடியன் நடுவில் மின்விளக்கு அமைக்க முடிவு செய்தார். இதற்காக ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர்கோயில் எதிரே தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைப்பதற்கான பணியை நேற்று தர்மபுரி எம்எல்ஏ பாஸ்கர் துவக்கி வைத்தார். தேமுதிக மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் குமார், கவுன்சிலர் அசோகன், முன்னாள் மாதேமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், பழனிசாமி, தொப்பூர் ஊராட்சி மன்ற செயலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சாலையில் சென்ற லாரியின் ஓட்டுனர்களுக்கு தேமுதிகவினர் இனிப்பு வழங்கினர்.

இதுகுறித்து எம்எல்ஏ பாஸ்கர் கூறுகையில், தொப்பூர் கணவாய் கட்டமேட்டிலிருந்து, மேம்பாலம் வரையிலும் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு இந்த சென்டர் மீடியின் மின்விளக்கு அமைக்கப்படுகிறது. 25 மீ. தூரத்திற்கு ஒரு மின்விளக்கு அமைக்கப்படவுள்ளது. தொப்பூர் கணவாய் பகுதி மின்விளக்கால் வெளிச்சம் இருந்தால் சாலை விபத்து கட்டுப்படுத்தப்படும். மேலும், விபத்து நடந்தாலும் உடனே மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் குறைக்கமுடியும். இந்த பணி ஒருமாதத்தில் முடியும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்