SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 கோயில்களில் கொடி மரத்துக்கு பிரதிஷ்டை

1/30/2016 10:58:41 AM

கும்பகோணம், :  கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில் மற்றும் வியாழசோமேஸ்வரர் கோயில் ஆகிய 2 கோயில்களில் நேற்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருக்குடந்தை கீழ் கோட்டம் எனப் போற்றப்படும் கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில் நாகதோஷ பரிகார தலமாகும். இக்கோயிலில் உள்ள கொடிமரம் சிதிலமடைந்திருந்ததால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் 43 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தேக்கு மரத்தில் செய்யப்பட்ட இந்த கொடிமரத்தின் மேலே செப்புத்தகடு பொருத்தப்பட்டு பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இதேபோல் குரு சந்திரன் வழிபட்ட தலமாக திகழும் வியாழ சோமேஸ்வரர் கோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொடி மரத்திற்கு பதிலாக ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 25 அடி உயரத்தில் புதிதாக கொடிமரம் உருவாக்கப்பட்டு அதன் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்த இரு கோயில்களிலும் உள்ள மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்