SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கள்ளநோட்டு கும்பல் கைது

1/29/2016 10:06:08 AM

திருப்பத்தூர், : கடைகளில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், மதுரை ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு நேற்று 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்திறங்கிறது. கடையில் இருந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து ரூ.60க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கி சென்றனர். தொடர்ந்து அடுத்துள்ள மிக்சர் கடையிலும் ஆயிரம் ரூபாயை கொடுத்து மாற்றி சென்றனர். கடையின் உரிமையாளர் கண்ணனுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது. அருகிலுள்ள தனியார் வங்கிக்கு சென்று அந்த ஆயிரம் ரூபாய் நோட்டை காட்டினார். அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரிவ், திருப்புத்தூர் டவுன் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் கள்ளநோட்டு கும்பல் குறித்து மைக்கில் தெரிவித்து உஷார்படுத்தினர். எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் எஸ்ஐகள் மாணிக்கம், சேதுராஜா தலைமையில் வாகனங்களை சோதனையிட்டனர். அந்த வழியாக காரில் வந்த கள்ளநோட்டு கும்பலை மடக்கி பிடித்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து எஸ்.எஸ்.கோட்ைட போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34), புதுத்தெரு அப்துல்லா (35), அஜ்மல் (20), மீரான்முகைதீன் (32) எனத் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி 30 ஆயிரம் ரூபாய், மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்