SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15 ஆண்டுகளுக்கு பிறகு கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் தெப்பத்திருவிழா

1/23/2016 10:55:19 AM

சங்கரன்கோவில், : கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர்சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தெப்பத்திருவிழா நடந்தது.சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள பால்வண்ணநாதர்சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் கடந்த 15 ஆண்டுகளாக தெப்ப திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு பெய்த தொடர்மழையால் தற்போது கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் ஜன.22ல் தெப்பதிருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, நேற்று பால்வண்ணசுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பின் தெப்ப திருவிழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது, தெப்பத்திற்கு போகும் வழியை காவல்துறையினர் ஆக்கிரமித்திருந்ததை கண்டித்து ஏற்கனவே சாலை மறியலிலும், கடையடைப்பிலும் ஈடுபட்டோம். ஆனால் இன்று வரை அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. ஆதலால் பக்தர்களும், பொதுமக்களும் ஆக்கிரமிப்பை சுற்றி வந்து தெப்பதிருவிழாவில் கலந்து கொண்டோம். அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றியிருந்தால் எங்களுக்கு இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும் என தெரிவித்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்