SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டீஸ்வரம் ேதனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் 29ம் தேதி நடக்கிறது

1/20/2016 10:50:57 AM

கும்பகோணம், : பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயில் கும்பாபிஷேகம் 1999ம் ஆண்டு நடந்தது. அதைதொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு ரூ.2 கோடியில் திருப்பணிகள் நிறைவடைந்தது. ரூ.24 லட்சத்தில் 200 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுரம், தலா ரூ.10 லட்சத்தில் 150 அடி உயரமுள்ள தெற்கு, மேற்கு, வடக்கு கோபுரங்கள், ரூ.13 லட்சத்தில் அங்கபிரதட்சன மண்டப வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. இதைதொடர்ந்து இந்த கோயில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 24ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது. 29ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உயர் அதிகாரிகள்,  உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்