SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக விளைச்சலை தரக்கூடிய ‘பிஒய்-8’ நெல் ரகம் விரைவில் அறிமுகம்

1/20/2016 10:03:59 AM

புதுச்சேரி, :  புதுச்சேரி குருமாம்பேட்டில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயம், கால்நடை, திசு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளாண் உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நெல், மணிலா ஆராய்ச்சி கூடமும் இயங்கி வருகிறது. அங்கு 7 வகையான நெல் ரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் கடந்த 1979ம் ஆண்டு பிஒய்-1 புதுவை பொன்னி என்ற நெல் ரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வயது 135 நாட்களாகும்.  இதனை பின் சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் பயிரிடலாம். ஒரு ஹெக்டேருக்கு 5500 கிலோ விளைச்சல் தரக்கூடியது.

இதற்கடுத்தபடியாக  1980ம் ஆண்டு அறிமுகப்படும் செய்யப்பட்ட பிஒய்-2 புனிதவதி என்ற நெல் ரகம் குறுவை, சொர்ணவாரி, நவரை பருவ பயிராகும். இதன் வயது 95 முதல் 100 நாட்களாகும். ஹெக்டேருக்கு 5 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் தருகிறது. 1984ம் ஆண்டு பிஒய்-3 பாரதிதாசன் என்ற ரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சொர்ணவாரி, நவரை பருவத்தில் பயிரிடக்கூடியது. இதன் வயது 115 நாட்களாகும். ஹெக்டேர் ஒன்றுக்கு 5250 கிலோ விளைச்சலை தருகிறது.

1989ம் ஆண்டு பிஒய்-4 ஜவகர் என்ற நெல் ரகம் உருவாக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது. சம்பா (ஆகஸ்ட் விதைப்பு) பருவ பயிரான இதன் வயது 145-150 வரை நாட்களாகும். ஹெக்ேடருக்கு 6250 கிலோ மகசூலை அள்ளித்தரக் கூடியது. பிஒய்-5 அரவிந்தர் என்ற நெல் ரகம் 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சொர்ணவாரி, நவரை, குறுவை பயிரிடலாம். இதன் வயது 90 முதல் 95 நாட்களாகும். ஒரு ஹெக்ேடருக்கு 6 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் தரும்.

2000ம் ஆண்டு பிஒய்-6 சுப்ரமணிய பாரதி என்ற ரகத்தை கண்டுபிடித்தனர். இது செப்டம்பர் மாதம் பயிரிடக்கூடிய சம்பா பருவ பயிராகும். இதன் வயது 135 நாட்களாகும். ஒரு ெஹக்டேருக்கு 5500 கிலோ வரை விளைச்சல் இருக்கும். கடைசியாக பிஒய்-7 அன்னலட்சுமி என்ற நெல் ரகம் 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது பின் சம்பா, தாளடி பருவ பயிராகும். 125 நாட்கள் வரை வயதுடைய இந்த ரகத்தின் மூலம் ஹெக்டேருக்கு 5,500 கிலோ விளைச்சல் இருக்கும். இது நடுத்தர சன்ன வெள்ளை அரிசி, சாயாத தன்மை கொண்டது. திருந்திய நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்புடையதாகும்.

துங்ரோ வைரஸ் நோய் எதிர்ப்புத்திறன், குலை நோய், பழுப்பு புள்ளி மற்றும் கதிர் உறை அழுகல் நோய் மிதமான எதிர்ப்பு திறன் கொண்டதாகும். இதேபோல் குருத்து பூச்சி, இலை சுருட்டு பூச்சி ஆகியவற்றை தாங்கி வளருகிறது. மேலும் அதிக புரதம் (9.04%), நடுத்தர அமிலோஸ் (20.4%), அதிக அரவைத்திறன் (71%) கொண்டாகவும் உள்ளது. இத்தகைய காரணங்களால் புதுச்சேரியை சேர்ந்த விவசாயிகள் பிஒய்-7 நெல் ரகத்தை பயிரிடுவதில் அதிக ஆர்வம்காட்டுகின்றனர்.

இந்நிலையில் 2007ம் ஆண்டுக்கு பிறகு ஒட்டு முறையில்(கிராஸ்பிரீடிங்) புதிய நெல் ரகத்தை உருவாக்கும் பணியில் நெல் ஆராய்ச்சியாளர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, தற்போது புதிய நெல் ரகத்தை உருவாக்கி உள்ளனர். கமிட்டியின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அறிவியல் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்