SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தால் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல்

1/9/2016 10:32:04 AM

சேதுபாவாசத்திரம், : உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார். கோடை பருவத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உளுந்து பயிர் சாகுபடிக்கு ஏற்ற தருணமாகும். இதற்கு ஏற்ற ரகம் ஆடுதுறை 5. வம்பன் 5,6. ஐ.டி.யூ 941, ஆகியவையாகும். விதைப்பு செய்தவற்கு முன்பாக விதை மூலம் பரவக்கூடிய வேரழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூசானம் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம்  2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் உரத்தை 200 கிராம் அத்துடன் அசோஸ்பைரில்லம் 200 கிராம் என்ற உயிர் உரம் சேர்த்து 160 மில்லி ஆறிய  அரிசி கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 1 நாள் முழுவதும் நிழலில் உலர்த்தி  பின்னர் உயிர் உர நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்கு பின் விதைப்பு செய்ய வேண்டும். இதனால் தழைச்சத்து இடுவதை குறைத்து கொள்ளலாம். சாகுபடி செலவு குறைகிறது. தரிசு நிலத்தில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு  8 கிலோ விதை போதுமானது. நஞ்சை தரிசில் விதைப்பு செய்யும்போது 1 ஏக்கருக்கு  10 கிலோ விதை போதுமானது. இதை அறுவடை செய்வதற்கு 8 லிருந்து 10 நாட்களுக்கு முன்பாக விதை நேர்த்தி செய்து விதைகளை தூவ வேண்டும். அப்போதுதான் அனைத்து விதைகளும் முளைக்கும். இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடிக்கும்போது எக்டேருக்கு 630 கிலோ வரை மகசூல் பெறலாம். தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதை விநியோகிக்கப்பட்டு வருகிறது. வம்பன் 5, 6, ஆடுதுறை 5, ஐ.டி.யு 941 ஆகிய உளுந்து விதைகள் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் போதுமானளவு இருப்பில் உள்ளது. இத்தகவலை வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்