SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டையொட்டி ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

1/2/2016 1:34:32 PM

அரியலூர், :  திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை திருத்தலம் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு  திருப்பலிகள் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை திருத்தலத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கும், நேற்று காலை 8.30க்கும் நடைபெற்றது. ஆலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி,  பங்குதந்தை லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு வெற்றிமாதா உருவ சிலைக்கு அருகில் இயற்கை வனப்புடனும், மின்விளக்கு அலங்காரத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசு வைக்கப்பட்டு பக்தர்கள் குழந்தை ஏசுவை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். நிகழ்ச்சியில் ஏசு கிறிஸ்து பிறப்பை தொடர்ந்து பெயர் சூட்டும் நாளாக நேற்று புத்தாண்டை பக்தர்கள் கொண்டாடினர்.
திருப்பலியில் பங்குதந்தை லூர்துசாமி இந்த புதிய வருடத்தில் அனைவரும் ஒற்றுமையுடனும், எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் சிறப்பாக வாழ வேண்டும். உலக அமைதிக்கும், உலக ஒற்றுமைக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அனைவரும் சபதம் ஏற்போம் எனகூறினார். தொடர்ந்து  இந்த அடைக்கல அன்னை ஆலயத்தில் 53 அடி உயரத்தில் அமைய உள்ள புனித அடைக்கல அன்னையின்  வெண்கல சிலை அமையும் பணி நடைபெற்று  முடியும் தருவாயில் உள்ளது.  இதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். விழாவில் திண்டுக்கல், பாண்டிச்சேரி, புதூர், ஏலாக்குறிச்சி, திருமானூர்,  சுள்ளங்குடி, விழுப்பனங்குறிச்சி, கீழவரப்பன்குறிச்சி, மேலவரப்பன்குறிச்சி, நதியனூர், வடுகபாளையம் போன்ற பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருமானூர் பகுதியில் கிறிஸ்தவ விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தூயமங்கள அன்னை ஆலயத்திலும், திருமானூர் புனித  அருளானந்தர் ஆலயத்திலும்,  குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியர் ஆலயத்திலும் மற்றும் திருமானூர் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும்  புதுவருடபிறப்பை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கும், நேற்று காலை 8.30 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான  கிறிஸ்தவ பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் புனிதபாத்திமா அன்னை ஆலயத்தில வட்டார முதன்மைகுரு கோஸ்மான் ஆரோக்கியராஜ், வரதராஜன்பேட்டை அலங்காரஅன்னை ஆலயத்தில் பங்குதந்தை விண்சென்ட்ரோச்மாணிக்கம், தென்னூர்  அன்னை லூர்து ஆலயத்தில் செல்வராஜ், நெட்டலகுறிச்சி சவேரியார் ஆலயத்தில் மரியலூயிஸ், ஆண்டிமடம் மார்த்தினார் ஆலயத்தில் ஜான்பிரிட்டோ ,வடவீக்கம் உபகார அன்னை ஆலயத்தில் அமல்ராஜ், குமிளங்குழி புனித சவேரியார் ஆலயத்தில் ஜோசப்மைக்கேல்ராஜ், பட்டணங்குறிச்சி லூர்து அன்னை ஆலயத்தில் மார்க், கூவத்தூர் அந்தோணியார் ஆலயத்தில் சூசைமாணிக்கம், சூசையப்பர்பட்டிணம் சூசையப்பர் ஆலயத்தில்  ஜோசப்ஆரோக்கியராஜ் கண்டியங்குப்பம் சலேத்மாதா ஆலயத்தில் ராஜமாணிக்கம், விழப்பள்ளம் செபஸ்தியார் ஆலயத்தில் ஜெரோம்பால்ராஜ், அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயத்தில் இமானுவேல், கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் மரியலூயிஸ்  ஆகிய பங்கு தந்தையர் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், காலையிலும் சிறப்பு கூட்டு திருப்பலிகள் நடத்தபட்டது, திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும், வறுமை ஒழிய, மனித ஒற்றுமை , மழை பெய்து விவசாயம் செழிக்க ஜெபம் செய்தனர்.  பின்னர் ஆலயங்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் வழிபாடுசெய்து புத்தாண்டு கேக் கொடுத்து ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-05-2019

  22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BhuldanaAccidentMum

  மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்