SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மாநாடு

11/21/2015 10:25:04 AM

திருச்சி, : திருச்சியில் வரும் ஜனவரி மாதம் 2 நாள் தொழில் முைனவோர் ஊக்குவிப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) இளைஞர் பிரிவு சார்பில் அதன் ஒருங்கிணைப் பாளர்கள் ஜான்அசோக், பொன்னம்பலம், பிரதீவ்சந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:  இந்திய தொழில் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பு சார்பில் திருச்சியில் வரும் ஜனவரி மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டையொட்டி நடைபெற உள்ள கருத்தரங்கில் கல்லூரி மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். மேலும் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திராமல் சுயதொழில் தொடங்குவதற்கான வழி முறைகள், அரசு மானியம், வங்கி கடன் கிடைப்பதற்காக செய்ய வேண்டியவை பற்றி அவர் களுக்கு இந்த மாநாட்டில் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நவம்பர் 20ம் தேதி (நேற்று) முதல் தங்களது கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். சிறந்த கட்டுரைக்கு பரிசு வழங்கப்படும். இது தொடர்பாக முழு விபரங்களையும் www.yutry.in என்ற இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்