மதுரையில் இன்று தெப்பத்திருவிழா மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு

Date: 2015-02-03 10:44:07

மதுரை, : மதுரையில் இன்று தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. தெப்பக்குளத்தில் மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் எழுந்தருளுகின்றனர். இதனால் மீனாட்சி அம்மன்கோயில் நடை அடைக்கப்படுகிறது. மதுரை மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இருவேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். இன்று அதிகாலை மீனாட்சியும், சுந்தரேசுவரரும் பிரியாவிடை சகிதம், கோயிலிலிருந்து மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக வருகின்றனர்.

அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் இவர்கள் நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வருகின்றனர். அம்மன் சன்னதி, கீழமாசி வீதி வழியாக யானைக்கல், நெல்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக வந்து தெப்பக்குளத்தைச் சுற்றி முத்தீஸ்வரர் கோயிலை வந்து சேர்கின்றனர்.  காலை 10.35 முதல் 10.59 மணிக்குள் அம்மனும், சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். இரவு பவுர்ணமியில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அம்மன் சுவாமி இரவு கோயில் திரும்பும் வரை மீனாட்சி கோயிலில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

தெப்பத்திருவிழாவையொட்டி, வைகை ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமி ஊர்வலம் நடைபெறும் பகுதிகள் மற்றும் தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated

Like Us on Facebook Dinkaran Daily News