SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலூர் கிரானைட் குவாரிகளில் தனிப்படை அதிரடி சோதனை குவாரி உரிமதாரர்கள் தலைமறைவு

2/3/2015 10:44:00 AM

மேலூர், : மேலூர் பகுதியில் விஏஓக்கள் புகார் அளித்த கிரானைட் குவாரிகளில் நேற்று தனிப்படை போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். திடீரென கிரானைட் வழக்குகள் தீவிரமடைவதால் குவாரி உரிமதாரர்கள், ஊழியர்கள் தலைமறைவாகி விட்டனர். மதுரை மேலூர் பகுதியில் அரசு புறம்போக்கு, கண்மாய்கள், வண்டிப்பாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டியதாக கலெக்டர் தொடுத்த 118 வழக்குகள், போலீசார் தொடர்ந்த 15 வழக்குகள் என 135 வழக்குகள் குவாரி உரிமதாரர்கள் மீது ஏற்கனவே உள்ளன. இந்நிலையில் விஏஓ.க்களிடம் தனியாக புகார்களை பெற்று 6 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கீழையூர் விஏஓ அழகுபாண்டி கொடுத்த 2 புகாரில் மணிகண்டன் எக்ஸ்போர்ட் உரிமையாளர் ராமநாதன் அரசுக்கு ரூ.29 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், மதுரா கிரானைட்ஸ் நிறுவன பங்குதாரர்கள் அன்வர் அலி, ராஜாபாய், நாகூர் அனிபா ஆகியோர் ரூ.11 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் வழக்கு பதிவானது. இதில் நாகூர் அனிபா கைது செய்யப்பட்டார்.  கீழவளவு விஏஓ ரவிச்சந்திர பிரபு கொடுத்த புகாரில் ரூ. 58.50 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக இப்ராஹிம் சேட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது மேலாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இ.மலம்பட்டி விஏஓ(பொறுப்பு) முகமது அலி புகாரில் 56 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பிஎஸ் கிரானைட்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அய்யாபட்டி விஏஓ(பொறுப்பு) பாண்டியராஜன், கருங்காலக்குடி அருகில் உள்ள திருச்சுனையில் சோலை ராஜன் என்பவர் அத்துமீறி கிரானைட் கற்களை வெட்டி 69.50 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் செய்துள்ளார். இவ்வழக்கில் சோலைராஜன், மோகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உசிலம்பட்டி சக்கரப்ப நாயக்கனூர் விஏஓ சங்கர பாண்டியன் புகாரில் 4.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்த படிக்காசு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குவாரிகளில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். விஏஓ.,க்கள், தலையாரிகள் மற்றும் புகைப்படக்காரர்கள் உதவியுடன் முறைகேடுகள் குறித்து துல்லியமாக அளந்து பதிவு செய்யப்பட்டது. வழக்கிற்கு தேவையான ஆவணங்களை முறையாக தயாரிக்க, அரசு வக்கீல்களும் உதவி செய்தனர்.  தனிப்படை போலீசார் கிரானைட் குவாரி அதிபர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அரசின் இந்த திடீர் பாய்ச்சலை கண்டு மிரண்டு போன குவாரி உரிமதாரர்கள் மற்றும் ஊழியர்கள் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

சகாயத்தின் 6வது கட்ட விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, வருவாய்த்துறை மற்றும் தனிப்படை போலீசார் புதிய வழக்குகள் என பாய்ச்சல் காட்ட, கலெக்டர் மேலும் புதிதாக சில கிரானைட் வழக்குகளை தாக்கல் செய்ய உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, குவாரி உரிமதாரர்கள்  கலக்கத்தில் உள்ளனர். இது மேலூர் பகுதியை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது.

sms spy app read spy apps free

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jayalalitha_111

  69வது பிறந்த தினம் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

 • electric_train_111

  பரங்கிமலை-பழவந்தாங்கல் இடையே பயங்கரம் : மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த 3 வாலிபர்கள் உடல் சிதறி பரிதாப பலி

 • 24-02-2017

  24-02-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3000ghaotsCOMINGinlakekkk

  3,000 ஆடுகள் ஒரே நேரத்தில் உறைந்த திபெத்திய ஏரியை கடந்து செல்லும் கண்கவர் படங்கள்

 • californiacerlIONDROWNS

  தெற்கு கலிபோர்னியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்