SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருகும் பயிரை காப்பாற்றுமாறு கண்ணீருடன் தண்ணீர் கேட்டு விவசாயிகள் மனு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

2/3/2015 10:43:51 AM

மதுரை, : பெரியாறு அணையில் 142 அடி நிரம்பியதை நம்பி பயிரிட்டோம், தண்ணீரை பாகுபாடின்றி வழங்கி காப்பாற்றுங்கள் என கருகும் நெற்பயிருடன் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். பெரியாறு அணை 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பரில் 142 அடி நிரம்பியது. இதன் உபரி நீர் வைகை அணையில் தேக்கப்பட்டது. இதை நம்பி விவசாயிகள் முழுமையாக பயிரிட்டனர். ஆனால் தண்ணீர் பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக வீணாகி, தற்போது பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தேவையான அனைத்து பகுதிகளுக்கும் சீராக விநியோகம் செய்யப்படாமல், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கருகிய நெற்பயிரை காட்டி கண்ணீர் வடித்தனர்.
பனைக்குளம், சுந்தரநல்லூர், மாதப்புலி, கா.குளம், எஸ்.நெடுங்குளம், ஓ.நெடுங்குளம், வெள்ளகுப்பான், வரகநேரி, புளியங்குளம் ஆகிய 9 கிராமங்களின் கண்மாய் விவசாயிகள் சமூக சேவகர் எஸ்.எம்.முத்துகணேசன் தலைமையில் அப்துல்வகாப், ராஜேந்திரன், கல்லாணை அப்துல்ரகுமான் உள்பட ஏராளமானோர் கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு அளித்து, ‘‘பெரியாறு வைகை பாசன 9வது பிரிவு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் வாடுகிறது. கடந்த 3 ஆண்டுகள் பயிரிடவே இல்லை. பெரியாறு அணையில் 142 அடி நிரம்பியதை நம்பி நட்டோம்.  தற்போது வைகை அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் குறிப்பிட்ட பகுதிக்கு செல்கிறது. எங்கள் பகுதிக்கு வரவில்லை. கலெக்டர் தலையிட்டு தண்ணீர் கிடைக்க செய்து கருகும் பயிரை காக்க வேண்டும்“ என்று கூறினர்.

உசிலம்பட்டி தாலுகா முதலைக்குளம் கிராம முன்னேற்ற கமிட்டி சார்பில் துணைத் தலைவர் எம்.பி.ராமன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் சுப்பிரமணியனிடம் கருகும் நெற்பயிரை காட்டி மனு அளித்தனர். அதில் “பெரியாறு பாசனம் திருமங்கலம் கால்வாயில் இருந்து முதலைக்குளம் பெரிய கண்மாய்க்கு ஒரு மாதத்திற்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கொக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொடுத்ததும், சுழற்சி முறையில் முதலைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். வாடும் பயிரை காக்க கூடுதலாக 5 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும்“ என கோரி உள்ளனர்.
பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகளை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

sms spy app read spy apps free

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-05-2017

    01-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-04-2017

    30-04-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • iVGCSwarBOATDD

    கடற்படைக்கு சொந்தமான ஐசிஜிஎஸ் வாரட் என்ற கப்பல் பணியிலிருந்து விடுவிக்கும் விழா நடந்தது

  • hEAYtarffivINkoyemBEDU

    3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் : கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • 29-04-2017

    இன்றைய சிறப்பு படங்கள்