பட்டா கோரி மறியல் பார்வையற்றோர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு

Date: 2015-02-03 10:43:43

மதுரை, :  பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை காசி பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் இசை பள்ளி சங்க தலைவர் சொக்கையன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மதுரை அண்ணா பஸ்நிலையம் திருவள்ளுவர் சிலை ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்காமல், கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது நடவடிக்கைக்காக போலீசார் பார்வையற்ற சிலரை பிடித்து இழுத்தனர். இதனால் போலீசாருக்கும், பார்வையற்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிந்த பின் ஒரு வார காலத்தில் வீடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் கைவிட்டனர். போராட்டத்தில் 10 பெண்கள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

watching my girlfriend cheat open my girlfriend cheated

Like Us on Facebook Dinkaran Daily News