மதுரை மாநகராட்சி நடவடிக்கை கொசுக்கள் வளர்த்த டிபன் சென்டருக்கு சீல்

Date: 2015-02-03 10:43:36

மதுரை, :டெங்கு ஒழிப்பில் இறங்கியுள்ள மாநகராட்சி எடுத்த நடவடிக்கையால் டிபன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டதுடன் ரூ. 74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நான்கு மண்டலங்களுக்கு உள்பட்ட வார்டுகளில் வீடுவீடாக சென்று அபேட் மருந்து தெளித்தனர்.

வார்டு 27ல் கற்பகா நகரில் கமிஷனர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அழகர்நகர் 3வது தெருவில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று காணப்பட்ட டிபன் சென்டரை பூட்டி சீல் வைத்தார். அப்பகுதியில் வீடுவீடாக சென்று சோ தனை நடத்தினார். அப் போது ஒரு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியின் பின் பக்கம் சோதனை செய்தார்.

அதில் லார்வா புழு இருந்ததால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 20 ஆ யிரம் அபராதம் விதித்தார்.  மேலும் சில கடைகளில் வைத்திருந்த குளிர்சாதனபெட்டியிலும் லார்வா இருந்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ. 26ஆயிரம் அபராதம் விதித்தார். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளை சுத்தம் செய்யாமல் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டார்.

இது தவிர மண்டலம் 1ல் வார்டு 4, 13, 15 பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், வீடுகளில் கொசு வளர்த்ததால் ரூ. 23 ஆயிரத்து 700 அபராதம் விதித்தார். 10 வீடுகளில் குடி நீர் இணைப்பு துண் டிக்கப்பட்டது. சட்டவிரோதமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 4 வீடுகளின் மின்மோட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மண்டலம் 4ல் டிவிஎஸ்நகர் பகுதியில் 5 வீடுகளுக்கு ரூ. 5ஆயிரம் அபராதம் விதித்தார். மொத்தம் ரூ. 74 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது.  இந்த அதிரடி ஆய்வின் போது உதவி கமிஷனர்கள் குணாளன், பழனிச்சாமி, செல்லப்பா, சுகாதார ஆய்வாளர்கள் கோபால், சேதுராமன், வெங்கிடசாமி, வீரன், சிவசுப்பிரமணியன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News