வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவச திறன் எய்தும் பயிற்சி திட்டம்

Date: 2015-02-03 10:20:55

கோவை, : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கா தொழில்நுட்ப திறன் எய்தும் பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் இணைந்து குறுகிய கால பயிற்சியை(வெல்டிங் மற்றும் பேப்ரிகேஷன்) பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி மூலமாக இலவசமாக அளிக்க  திட்டமிட்டுள்ளது.  இப்பயிற்சி தினமும் கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

திருப்திகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு உணவு, போக்குவரத்திற்கான செலவு தொகை வழங்கப்படும். முடிவில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.  இப்பயிற்சியில் 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.வயது வரம்பு 18 முதல் 40. அரசு விதிப்படி ஒட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள் அசல் கல்வி, சாதி, இருப்பிட முகவரிச் சான்று ஆகியவற்றுடன் சமீபத்தில் எடுத்த 2 புகைப்படத்தை கொண்டு வர வேண்டும்.

இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 9.2.2015.

sms spy app click spy apps free

Like Us on Facebook Dinkaran Daily News