ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Date: 2015-02-03 10:20:45

கோவை, : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா வேலுமணியம்மாள் அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவி வரவேற்றார். கல்லூரி மேலாண்மை அறங்காவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். மைசூர் ஜேஎஸ்எஸ் பல்கலையின் துணைவேந்தரும், புதுதில்லி பார்மசி கவுன்சில் தலைவருமான சுரேஷ் பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘எதிர்காலத்தில் மருத்துவ துறையில் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இத்துறையில் சிறந்து விளங்க மாணவர்கள் நவீன மருத்துவ நுட்பங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுதல் அவசியம்’ என்றார்.
 இந்த விழாவில், 50 பி.பார்ம், 15 எம்.பார்ம் , 14 பார்ம்.டி, மற்றும் 5 பிஎச்.டி மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். எஸ்என்ஆர் டிரஸ்ட் அறங்காவலர் ராமகிருஷ்ணன், முதன்மை நிர்வாக அதிகாரி ராம்குமார், ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் சுகுமார், கல்லூரி துணை முதல்வர் கோபால் ராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News