பந்தய கார் வடிவமைப்பில் மாணவர்கள் சாதனை

Date: 2015-02-03 10:20:38

கோவை, : அகில இந்திய அளவில் சிறிய ரக பந்தய கார்கள் வடிவமைப்பு, உருவாக்கம், சோதனை போட்டி நடந்தது. இதில் கோவை இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் 2ம் இடம் பெற்றனர். பஞ்சாப்பை சேர்ந்த ‘இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னொவேடிவ் இன்ஜினியர்ஸ்’ என்ற அமைப்பு கோவை செட்டிபாளையத்தில் நடத்திய அகில இந்திய அளவிலான சிறிய ரக பந்தய கார்கள் வடிவமைப்பு, உருவாக்கம், சோதனை போட்டியை நடத்தியது.

 180க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளில், இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி நிதி உதவியுடன், கல்லூரி தொழில் கூடத்தில் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டு, அனைத்து சோதனைகளிலும் இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் சிறிய ரக பந்த கார் வெற்றி பெற்றது. மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Like Us on Facebook Dinkaran Daily News