அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

Date: 2015-02-03 10:20:31

கோவை, : அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி செல்வபுரம் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் நேற்று மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதில், இசக்கிமுத்து தலைமையில் செல்வபுரம் பகுதிமக்கள், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
காந்திபுரம் சித்தாபுதூரில் ‘அச்சீவர்ஸ் அக்ரி இண்டியா‘ எனும் நிதிநிறுவனம் இருந்தது.

இதில், கோவை மாவட்ட லீடர்களாக இருந்த சக்தி செல்வம், கனகராணி தம்பதியினர், என்னை அணுகி நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு பிறகு 36 சதவீத வட்டியுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறினர். இதனை நம்பி ரூ.2.75 லட்சத்தை நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தேன். தொடர்ந்து, எனக்கு கீழ் கோவை மற்றும் சேலத்தை சேர்ந்த 320 பேரையும் நிதிநிறுவனத்தில் சேர்த்துவிட்டேன். அவர்கள் மொத்தம் ரூ.7 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக முதலீடு செய்த தொகைக்கு எந்த வட்டியும் கொடுக்கவில்லை.

 மேலும், நிதிநிறுவனத்தின் அலுவலகத்தையும் பூட்டி விட்டனர். அதனால், என்னிடமும், எனக்கு கீழ் உள்ள 320 நபர்களிடமும் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி செய்த, கோவை மாவட்ட டிவிஷன் லீடர்களான சக்தி செல்வம், கனகராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீடு செய்த பணத்தையும் மீட்டு தரவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures

Like Us on Facebook Dinkaran Daily News