ரோட்டில் கிடந்த 7 ஆயிரம் ரூபாய் போலீசில் ஒப்படைப்பு

Date: 2015-02-03 10:20:21

கோவை, : கோவை பீளமேடு பொரிக்கார சந்தில் வசிப்பவர் முபாரக்(40). ஆட்டோ டிரைவர். நேற்று முன் தினம் இரவு செஞ்சிலுவை சங்கம் அருகே ஆட்டோ ஓட்டி சென்றார்.  அப்போது ரோட்டில் ஒரு பர்ஸ் கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது அதில் ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற் றும் 7 ஆயிரம் ரூபாய் இரு ந்தது. பர்ஸ் மற்றும் பணத்தை முபாரக் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்தார்.

பணம் மற்றும் பர்ஸ் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கம் முன் ஓட்டல் ஒன்று உள்ளது.  இங்கே வந்த யாராவது பர்சை தவற விட்டிருக்கலாம், இல்லாவிட்டால் இவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பர்சை தவற விட்டிருக்கலாம் என தெரிகிறது. பர்சை தவற விட்ட நபர், உரிய அடையாளத்தை சொல்லி பர்ஸ், பணத்தை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர். பர்ஸ், பணத்தை ஒப்படைக்க முபாரக்கை போலீசார் பாராட்டினர்.

sms spy app phone monitoring software spy apps free

Like Us on Facebook Dinkaran Daily News