வடசென்னை மக்களுக்காக 250 மில்லி ஆவின் பால் பாக்கெட் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது

Date: 2015-02-03 10:09:23

சென்னை, : சென்னையில் தற்போது ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவு கொண்ட பால் பாக்கெட்டை மட்டும் விற்பனை செய்து வருகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் ஒரு லிட்டர் ஆவின் பாலின் விலை ரூ24ல் இருந்து ரூ34 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வளவு தொகை கொடுத்து பால் வங்குவது சிரமாக உள்ளது என்று குடிசைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏழை எளிய மக்கள் ஆவின் பாலை வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் உயர் அதிகாரிகளில் தலைமையில் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. இதனடிப்படையில் ரூ11க்கு கால் லிட்டர்(250மில்லி) பால் பாக்கெட் சில்லறை விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தது. இது தொடர்பாக ஆவின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.  ஆவின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்றுமுதல் வடசென்னை பகுதியான திருவொற்றியூர், ராயபுரம், கொருக்குபேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் கால் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளை சில்லறை விலையில் விற்பனை செய்யப் படுகிறது.


Like Us on Facebook Dinkaran Daily News