தாய் அதிகளவு பாலூட்டியதால் குழந்தை மூச்சுத்திணறி சாவு

Date: 2015-02-03 10:08:46

கீழ்ப்பாக்கம், : சென்னை மாங்காடை சேர்ந்தவர் சீனிவாசன்(32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியும்   குழந்தைகள்  இல்லாமல் இருந்தனர்.  கடந்த 7 மாதத்திற்கு முன்பு கவிதா கர்ப்பமானார். இந்நிலையில், கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்  கடந்த 9ந்தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம்  2 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையை டாக்டர்கள் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். கவிதா சர்க்கரை நோயாளி என்பதால் அவரை தனியாக வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.  கடந்த 24ந்தேதி அன்று குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து தாய் இருந்த வார்டில் சேர்த்தனர். நேற்று மாலை கவிதா தனது குழந்தைக்கு பால் ஊட்டிய பொழுது குழந்தை மூச்சு திணறி இறந்தது.


Like Us on Facebook Dinkaran Daily News