ஓமலூர் அருகே மைனர்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்

Date: 2015-02-02 12:31:42

ஓமலூர், : ஓமலூர் அருகே நடக்க இருந்த இளம்வயது திருமணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளைக்குட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் நேற்று திருமணம் நடைபெற உள்ளதாக தாசில்தார் நர்மதாவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளியில் 12ம் பயின்று வரும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்து.

இதையடுத்து தாசில்தார் உத்தரவின்பேரில், கருப்பூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரவி பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று மாணவியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய வயதை எட்டாத நிலையில், இளம் வயதில் செய்யப்படும் திருமணத்தால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து, மணமகள் உரிய வயதை எட்டிய பின்னர் திருமணத்தை நடத்திக் கொள்வதென, இருவீட்டாரும் சம்மதித்து கடிதம் எழுதிக் கொடுத்தனர். மேலும், திருமண ஏற்பாடுகளையும் நிறுத்தினர்.Like Us on Facebook Dinkaran Daily News