ஆத்தூரில் வருவாய்த்துறை சார்பில் காவடிக்கு பூஜை செய்து பழனிக்கு புறப்பட்ட பக்தர்கள் தைப்பூச விழா

Date: 2015-02-02 12:31:09

இடைப்பாடி, : இடைப்பாடியில் இருந்து ஒவ்வொரு வருடமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு இடைப்பாடியின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வெள்ளூற்று பெருமாள் கோயில், பள்ளிபாளையம் காவிரி ஆறு, மயிலாடி, வட்ட மலை, அமராவதி வழியாக பழநி மலை சென்று சேர்கின்றனர். இவ்வாறு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதான கமிட்டி சார்பில் குழுவினர் செல்லும் வழித்தடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதற்காக 500க்கும் மேற்பட்ட வண்டிகளில் அரிசி மற்றும் தேவையான பொருட்கள் உடன் கொண்டு செல்கின்றனர். மேலும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் இலவசமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (1ம் தேதி) வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினரின் காவடி கட்டப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக பழநி மலைக்கு சென்றனர். இதனை தொடர்ந்து, நேற்று (2ம் தேதி) சித்தூர், புளியம்பட்டி காவடிகள் கட்டப்பட்டு, இவர்கள் வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை பழனி மலையில் சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இடைப்பாடி சுற்றியுள்ள பக்தர்கள் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News