தேர்தல் விதிமுறை மீறல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Date: 2015-02-02 12:01:15

திருச்சி,: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் விதிமுறை மீறல் தொடர்பாக நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என பொது பார்வையாளர் டாக்டர் பால்கார்சிங் தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வரும் 13ம் தேதி இடைத் தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான விதி மீறல்கள் ஏதும் இருந்தால் வேலை நாட்களில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முதல்தளத்தில் பொது பார்வையாளருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறிய கூட்டரங்கில் காலை 11மணி முதல் 12மணி வரை நேரில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தேர்தல் பார்வையாளரின் செல்போன் எண் 75980 54455, பேக்ஸ் எண் 0431 2313777 அல்லது தேர்தல் பார்வையாளர் தொடர்பு அலுவலரின் செல்போன் 74026 07614 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


Like Us on Facebook Dinkaran Daily News