வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பேலட் ஷீட் தயாரிப்பு பணிகள் மும்முரம் 740 மின்னணு இயந்திரம், 370 கட்டுப்பாட்டு கருவிகள்

Date: 2015-02-02 12:01:04

திருச்சி, : ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் பேலட்ஷீட் தயா ரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 740 மின் னணு இயந்திரம், 370 கட்டுப் பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் ஆனந்த், அதிமுக சார்பில் வளர்மதி, பாஜக சார்பில் சுப்ரமணி யம், மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி வேட்பாளராக அண்ணா துரை உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் மற்றும் சின்னம் கடந்த 30ம் தேதி வெளியிடப் பட்டது.

இந்நிலையில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய பேலட் ஷீட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் பொருத்துவதற்காக வும், வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய சீட்டுகளை அச்சிட்டு மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற் கான நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் சீட் அச் சிடும் பணி துவங்கி உள் ளது. பேலட் சீட் அகர வரி சையில் தயாரிக்கப்படும். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பா ளர் அண்ணா துரை முதலி லும், 2வதாக திமுக வேட் பாளர் ஆனந்த், 3வதாக பாஜ வேட்பாளர் சுப்ரமணியன், 4வதாக அதி முக வேட்பாளர் வளர்மதி, அதன்பிறகு சுயேட்சைகள் பெயர்கள் இடம் பெறுகின்ற னர்.

இந்த சீட்டு அச்சிடப்பட்டு விரைவில் திருச்சிக்கு கொண்டு வந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்கான பணிகளும் நடை பெற்று வருகிறது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் மொத் தம் 740 இயந்திரங்களும், 370 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளது.  மேலும் அவசர தேவைக் காக தயார் நிலையில் சில மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த இயந்திரங்களை அடிப்படையாக வைத்து வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய சீட்டு தேவை யான அளவில் தயாரிக்கப் பட உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News