திருச்சி அருகே வீட்டு கதவை உடைத்து 30பவுன் நகை,பணம் கொள்ளை

Date: 2015-02-02 12:00:55

துறையூர்,: திருச்சி அருகே வீட்டுக் கதவை உடைத்து 30 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. துறையூரை அடுத்த அபினிமங்கலத்தை சேர்ந்தவர் நல்லதம்பி(60). புத்தனாம்பட்டியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மனைவியுடன் நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடை ந்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகியிருந் தது.

இது குறித்து அவர் புலி வலம் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து ஜீயபுரம் டி.எஸ்.பி கென் னடி, மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர், நடேசன் புலிவலம் எஸ்.ஐ மனோ கரன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைநிபுணர் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News