திருச்சி திருச்செந்துறையில் நாளை வாழைத்தார் பொது ஏலம்

Date: 2015-02-02 12:00:46

திருச்சி, : திருச்செந் துறை வணிக வளாகத்தில் நாளை வாழைத்தார் பொது ஏலம் நடை பெறுகிறது.
திருச்சி வேளாண் விற் பனை மற்றும் வணிகத் துறை சார்பில் ஸ்ரீரங்கம் தாலுகா திருச்செந்துறை யில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகத்தில் வாழைத்தார் பொது ஏலம் நாளை செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.இந்த பொது ஏலத் தில் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதோடு எந்தவித கமிஷனுமின்றி அவர்களுக்கு உடனுக்கு டன் பணமும் பட்டு வாடா செய்யப்படுகிறது. இங்கு வாழைத்தார் கொண்டு வரும் விவசாயி கள் அன்று காலை 11 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம் வட்டாரங் களை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளும் வாழைத்தார்களை திருச்செந்துறை ஒருங்கிணைந்த வாழைவணிக வளாகத் துக்கு கொண்டு வந்து பொது ஏலத்தில் பங்கேற்கு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News