முக்கூடல் முருக பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Date: 2015-02-02 11:52:57

பாப்பாக்குடி, : முக்கூடல் திருமுருகன் திருச்சபை பாதயாத்திரை முருக பக்தர்கள் சார்பாக பால்குட ஊர்வலம் நடந்தது. திருமுருகன் திருச்சபை 30ம் ஆண்டு பாதயாத்திரை குழுவினர் குருசாமி ஜெயபால் தலைமையில் தை முதல் தேதி முத்துமாலையம்மன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். தினமும் பக்தர்களின் வீடுகளிலும், முக்கிய கோயில்களிலும் இரவு பக்தி பாடல்களுடன் கூடிய சிறப்பு பூஜை நடந்தது. நேற்று பால் குட ஊர்வலம் நடந்தது.

தாமிரபரணி ஆற்றிலிருந்து புறப்பட்டு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ராமசுவாமி கோயிலை வந்தடைந்தது. பின்னர் அங்குள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. நாளை 3ம் தேதி மாலை பக்தி இன்னிசை கச்சேரியும் தொடர்ந்து பாதயாத்திரை புறப்படுதலும் நடைபெறும். பிப்.6ம் தேதி திருச்செந்தூரில் சுவாமி தரிசனமும், வாணிப செட்டியார் மகாலில் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை திருமுருகன் திருசபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.முக்கூடலில் பாதயாத்திரை முருக பக்தர்கள் சார்பாக பால்குட ஊர்வலம் நடந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News