பொட்டல்புதூர் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம்

Date: 2015-02-02 11:52:52

கடையம், : பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. பொட்டல்புதூர் முகை தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன் தினம் பச்சைகளை ஊர்வ லம் நடந்தது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்து சேர்ந்தது. தொடர்ந்து எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீபஅலங்கார திடலில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் தீப அலங்கார வைபவம் நடக்கிறது.

தீப அலங்காரத்தை எம்.எல்.ஏ ராஜேந்திரன், கடையம் யூனியன் சேர்மன் சீனிவாசுகி, யூனியன் கவுன்சிலர் முருகேசன் முன்னிலை யில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் விளக்கேற்றி துவக்கி வைக் கிறார். இனாம்தார் எஸ்.பி. ஷா வரவேற்கிறார். இரவு நெல்லை அபுபக்கர், வகிதா குழுவினரின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 3ம் தேதி 14ம் நாள் இரவு வைபவம் ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் கமிட்டி தலை வர் எஸ்.பி.ஷா, உறுப்பினர் கள் செய்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News